ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு – தினகரன் ஆதரவாளர்கள் வெளியிட்டனர்!

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

வீடியோவில், படுக்கையில் கண் விழித்து சாய்திருந்தபடி, தனது இடது கையால் பழச்சாறு அருந்துகிறார். இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் சென்னையில் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே மயக்க நிலையில்தான் இருந்தார் என கூறப்பட்டது. எனவே மருத்துவமனையில் அவருக்கு சுயநினைவு திரும்பியதா..? என்னென்ன சிசிக்சைகள் வழங்கப்பட்டது என பலதரப்பிலும் கேள்வி எழும்பிய நிலையில் தற்போது ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வீடியோ எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை.

ஜெயலலிதா மறைந்தே ஒரு வருடம் தாண்டிவிட்ட நிலையில் தற்போதுதான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here