கலைஞர் டிவி தொகுப்பாளினியாக ஆனார் பிக் பாஸ் ஜூலி

பிக்பாஸ் வீட்டில் நிறைய அன்பை சம்பாரித்தது ஓவியா, நிறைய வெறுப்பை சம்பாரித்தது ஜூலி தாங்க.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று மக்களால் பெரிதும் அழைக்கப்பட்ட ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்களிடம் தலைகீழாக அதிக வெறுப்பை சம்பாதித்து விட்டார் ஜூலி.

ஆனால் ஜூலியின் தன்னம்பிக்கையை அனைவரும் பாராட்டி தான் ஆகவேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜூலிக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து கொண்டு தான் இருக்கின்றது.

இப்போது விஜய் டிவியில் மட்டுமின்றி இதர தொலைக்காட்சி நிறுவனங்களும் ஜூலியை தொடர்பு கொண்டு தான் இருக்கின்றனர். அது மட்டும் இன்றி நேர்காணல்கள் என ஜூலி ரொம்ப பிஸி ஆகிட்டாங்க.

இந்நிலையில் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா சீசன் ஆறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் ஜூலி. இந்த செய்தியை பல ஊடங்கங்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் கோகுல் மற்றும் கலா மாஸ்டர் நடுவர்களாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here