மும்பையில் தப்பி ஓடிய தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்

தாயை கொலை செய்துவிட்டு மும்பை சென்ற தஷ்வந்த் தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னையில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்தவன் தஷ்வந்த்.

தலைமறைவாக இருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்றான். போலீஸ் பிடியில் இருந்த தஷ்வந்தை மீண்டும் கைது செய்துள்ளனர் போலீஸ். மும்பை போலீசார் உதவியுடன் சென்னை போலீசார் தஷ்வந்தை கைது செய்துள்ளனர்.

தஷ்வந்த் ஏற்கனவே சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற கொடூரன். இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய தஷ்வந்த் மீண்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளான். இனி யார் நினைத்தாலும் இவனால் சிறைவாசத்தை விட்டு வெளிவர முடியாது என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here