சீனாவிற்கு எதிராக இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் பெண்கள் போர்ப்படை

இந்திய கடற்படையில் பாலின தடை உடைக்கப்பட்டு 20 பெண்கள் கொண்ட போர்ப்படை சீனாவிற்கு எதிராகவே புதிய எதிர்ப்பு நடவடிக்கையில் களமிறங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களின் நகர்வு அதிகரித்து காணப்படும் நிலையில், பெருங்கடலில் அவைகளை கண்காணிக்கும் பணியில் கடற்படையின் பெண்கள் பிரிவு களமிறங்குகிறது. அமெரிக்கா உருவாக்கிய போஸிடான் 8-இந்தியா போர் விமானம் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நகர்வை கண்காணிக்கிறது.

2.1 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து ‘பி-8ஐ’ விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இவ்விமானங்கள் ‘போயிங் பி-8 ஐ’ ரக விமானங்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ‘போயிங் பி-8ஐ’ ரக விமானமானது நவீன ரேடார்கள் மற்றும் ஆயுதங்களை கொண்ட உலகிலேயே சிறந்த விமானம் ஆகும். மேலும் 4 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்தாகி உள்ளது. ‘பி-8ஐ’ விமானம் கடலோர ரோந்துப் பணி, போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையிலானது.

“பணி எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது, அவற்றை நிறைவேற்றுவதே எங்களுடைய குறிக்கோளாகும்,” என மூத்த அதிகாரிகள் கூறிஉள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது.

2009-ம் ஆண்டு கண்காணிப்பு விமானங்களில் பெண்கள் முதல் முறையாக பணியில் அமர்த்தப்பட்டனர், அதிகமான அதிகாரிகள் இப்போது சிஸ்டம் சிறப்பு பிரிவுகளில் கைதேர்ந்தவர்களாகி உள்ளனர், பெண்கள் இப்போது விமானங்களில் தளபதி ‘ரேங்’ அளவிற்கு உயர்வடைந்து உள்ளனர். ‘பி-8ஐ’ விமானங்கள் மற்றும் ரஷிய தயாரிப்பு இலிஷின் ஐ -38 விமானங்களில் பணிபுரியும் பெண்கள் சென்சார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை பயன்படுத்துவதில் பெண் அதிகாரிகள் அதீத திறன் பெற்று உள்ளனர். அவர்களும் ஆண் படை வீரர்களை போன்று போர் வீரர்களும் ஆவார்கள், அவர்களும் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர்கப்பல்களை தாக்கவும் முடியும், மோதல் ஏற்பட்டால், டார்பெடோஸ் அல்லது ஏவுகணைகளைப் பயன்படுத்தி போர் கப்பல்களை அழிக்கவும் முடியும்.

அமெரிக்கா தயாரிப்பு ‘போயிங் பி-8 ஐ’ ரக விமானங்களில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மிகுதியான திறன் கொண்டு உள்ளனர்.

ராணுவ பணிக்கான தேர்வு வாரியங்கள் தகவலின்படி முதன்மை நிலையில் உள்ள அனைவரும் பெண் அதிகாரிகளே, நாங்கள் தகுதியின் அடிப்படையில் முன்நகர்கிறோம் என்கிறார் கடற்படை துணை அட்மிரல் ஏ.கே. சாவ்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here