விஜய் ஏற்பாடு செய்திருந்த மெர்சல் வெற்றிக் கொண்டாட்டம்

தெறி படம் ரிலீசான பிறகு, அட்லீ – விஜய் கூட்டணியில் ரிலீசான படம் மெர்சல். தீபாவளிக்கு முதல் நாள் வரை படம் வெளிவருமா வராதா என்று பதற்றத்துடனையே படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் காத்திருந்தனர். இறுதியில் தடைகள் பல கடந்து வெளிவந்தது மெர்சல்.

பாஜக தரப்பிலுருந்து விஜய் பேசிய சில வசனங்களுக்கு எதிர்ப்பு வந்துக்கொண்டிருந்த போதிலும் படம் வெற்றி அடைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இதையடுத்து மெர்சல் படக்குழுவினருக்கு வெற்றியை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் விஜய். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் அட்லி, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். ரஹ்மான் இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here