ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் தமிழ் பிரபலம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் பாதி முடிந்த பின் அதில் கலந்து கொண்டு நிறைய பேரின் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று கூட சொல்லலாம்.

முதலில் இருந்து நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தால் பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற்றிருப்பார் என்றும் கூட சொல்லி வருகின்றனர். பிக் பாஸ் முடிந்த பின் இவரது வாழ்க்கை ஒரு யூ டர்ன் அடித்துள்ளது. நிறைய நேர்காணல்களில் பங்குபெறுவது என ரொம்ப பிஸி ஆகிவிட்டார் ஹரிஷ் கல்யாண். இதற்குமுன் இவர் ஹீரோவாக நடித்த சின்ன பட்ஜெட் படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை.

Upcoming Director Elan With Superstar

சற்றுமுன் கிடைத்த உறுதியான தகவலில் இளம் இயக்குனர் இலன், ஹரிஷ் கல்யானை இயக்க உள்ளார். இலன் இதற்க்கு முன்பு கிரஹணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படம் சில சிக்கல்களால் திரைக்கு இன்னும் வரவில்லை.

இந்த படத்திற்கு ஹீரோயினாக பிக் பாஸ் புகழ் ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்க்கு முன்புவரை ரைசா மாடலிங் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here