சூரி புதிதாக கட்டிய பிரம்மாண்ட ஹோட்டல் தெரியுமா?

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் ஒரு காட்சியில் நடித்ததில் இருந்து சூரி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சூரியின் சொந்த ஊர் மதுரை, இங்கு தான் இவர் தன்னுடைய அம்மா, மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய நெருங்கினவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று படிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

இக்காலத்தில் நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை ரியல் எஸ்டேட் என்று பணத்தை போடுவர். ஆனால் சூரி தன்னுடைய குடும்பத்திற்காக மற்றுமொரு நல்ல விஷயமாக மதுரையில் ஒரு உணவகம் கட்டியுள்ளார்.

இந்த உணவகம் முழுக்க முழுக்க உயர்தர சைவ உணவகம். இந்த உணவகம் காமராஜர் ரோட்டில் உள்ளது. இதை திறந்து வைக்க சூரியின் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகரான சிவகார்த்திகேயன் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் இருந்தால் கண்டிப்பா போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here