விமானத்தில் பள்ளி குழந்தைகளுடன் பயணம் செய்த ரஜினிகாந்த்

கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 6- வகுப்பு மாணவ-மாணவிகள் 30 பேர் கடந்த 19-ந் தேதி காலை சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தனர். அதே விமானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பெங்களுருக்கு பயணம் செய்தார்.

அப்போது பள்ளி குழந்தைகள் தங்களுடன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பயணம் செய்வதை அறிந்ததும் மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். தங்களுடன் ரஜினிகாந்தும் பயணம் செய்வதை கண்டு ஆச்சரியத்துடன் குழந்தைகள் குதூகலித்தனர்.

ரஜினிகாந்தை பார்த்து ‘‘அன்புள்ள ரஜினிகாந்த் வாழ்க’’ என விமானத்தில் முழங்கினர். மேலும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வதை உணர்ந்த ரஜினிகாந்த் குழந்தைகளை தனித்தனியாக பாராட்டி நலம் விசாரித்தார்.

அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் அதிமுக்கிய நபர்கள் காத்திருப்போர் பகுதியில் குழந்தைகளுக்காக காத்திருந்த ரஜினிகாந்த் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்தினார்.

அப்போது பள்ளி குழந்தைகளிடம் ‘‘கல்வியில் கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களாக விளங்க வேண்டும். பெற்றோர்களையும் பெரியோர்களையும் நமது தாய்நாட்டையும் மதித்து நடக்க வேண்டும் என அறிவுரை கூறினார்”. அதனை தொடர்ந்து குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த பயணத்தில் 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினிகாந்துக்கு வருகிற டிசம்பர் 12-ந் தேதி பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்று புன்சிரிப்புடன் விடைபெற்று சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here